இயற்கை மருத்துவம்

எண்ணற்ற நன்மை தரும் எள் எள்ளில் உள்ள சத்துக்கள் : எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளை காண்போம். 1. சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது 2. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது 3. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. 4. கொழுப்பின் அளவை குறைக்கிறது 5. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும். அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்...