Posts

Showing posts with the label ஆடாதோடை

இயற்கையின் அதிசயம்

Image
 காயகற்ப மூலிகை - ஆடாதோடை "ஆயுள் மூலிகை" மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும். நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்.. மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சு...