இயற்கை மருத்துவம்
கொய்யா இலையின் இரகசியம் !! கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, சி, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. கொய்யா இலையின் பயன்கள் : 1. கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது. 2. 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்றுபோக்கிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 3. எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா இலையின் சாறு எடுத்து, அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும். 4. எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும். 5. மேலும் இதில் கொழுப்பு இல்லாததால் பெருங்...