இயற்கை மருத்துவம்
வெந்தயம் என்பது மருத்துவ குணங்கள் அடங்கிய வளமையான கிடங்கு என்பது உங்களுக்கு தெரியுமா? வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆல்கலாய்டு போன்றவைகள் அடங்கியுள்ளது. அதில் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளும் அடங்கியுள்ளது. வெந்தயம் உங்களுக்கு அழகு சேர்ப்பது முதல் உங்கள் உடல்நல பிரச்சனைகளை தீர்ப்பது வரை பல உதவிகளை செய்கிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உங்கள் உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உங்கள் உடலில் இருந்து வெளியேற்றும். இது உங்கள் பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கு நிவாரணம்: வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், உங்கள் காய்ச்சலை ...