பிரண்டை

பிரண்டை பிரண்டையின் சிறப்பு அம்சமே எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான். எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூடும். பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. எலும்பு பலம் பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும். நரம்பு பலம் பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும். ரத்த மூல ம் பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதை...