பிரண்டை

பிரண்டை 

பிரண்டையின் சிறப்பு அம்சமே எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான். எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.

பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது.


எலும்பு  பலம்

பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.


 நரம்பு பலம்

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை  நரம்புகளும் பலப்படும்.


ரத்த மூலம்

பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதைப் பகுதியை எடுக்கவும். இதை புளி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். இதனுடன் சுக்கு பொடி, மிளகுப் பொடி சேர்க்கவும். இதை பசையாக அரைத்து கொட்டை பாக்கு அளவுக்கு காலை, மாலை என 8 நாட்கள் சாப்பிட்டுவர ரத்த மூலம் சரியாகும்.

ஆசனவாயில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மலைப் பகுதியில், வயல் வெளியில் படர்ந்து காணப்படும் பிரண்டை, ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. புண்களை ஆற்றும்.

 ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.

பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.


இதயம்

பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு நன்கு ரத்தம் பாயச் செய்து இதய நலனை பாதுகாக்கிறது. 


நீரிழிவு 

நீரிழிவு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக பிரண்டை இருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மையே உடலிலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுத்து, நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகிறது.


பிரண்டை வற்றல்

நன்கு முற்றிய  இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.


பிரண்டை உப்பு

பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.

2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.


முறையற்ற மாதவிலக்கு

மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்படுவதுடன், அடி முதுகு பகுதி வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். இப்படியான காலங்களில் பிரண்டை தண்டுகளை துவையல், சட்னி, ரசம் போன்ற எந்த பக்குவதிலாவது செய்து சாப்பிட நலம் பயக்கும்.

* பிரண்டையை சிறு தீயில் இட்டு, வதக்கி சாறு பிழிந்து 30 மில்லி அலவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.


வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து

பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும். புளி தண்ணியில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். நன்றாக வதக்கவும். ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும். இது வாயு பிடிப்பை குணமாக்குவதுடன், கைகால் குடைச்சலை சரிசெய்கிறது. பிரண்டையானது உள் உறுப்புகள், எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை நிலைநிறுத்துகிறது.


இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்