இயற்கை மருத்துவம்
கோவைக்காய் மருத்துவ பலன்கள் 1. ஓர் அற்புதமான ‘ஆன்டிபயாடிக்’ என்று சொல்லப்படும் நோய் போக்கி ஆகும். 2. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள், கோவைக்காயை உண்ண பால் சுரக்க செய்யும். 3. கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது கோவைக்காய் . 4. தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவை இலை உபயோகப்படுகின்றது. 5. கோவைக்காயை வாயிலிட்டு மென்று உண்பதால் வாய்ப்புண் விரைவில் ஆறும். நாக்கு அச்சரம் அகலும். பற்களில் இருந்து ரத்தம் கசிதல், சீழ்பிடித்தல், பல் கூச்சம், பல் ஆட்டம் ஆகியவை குணமாகும். 6. கோவை இலைச் சாற்றை, விஷக்கடிகளுக்கு பூசலாம் , கோவைஇலை உஷ்ணத்தையும், வியர்வையையும் உண்டாக்கும் தன்மையுடையது , ஆறாத புண்கள், சொறி சிரங்கு இவற்றைப் போக்கும் . 7. கோவை இலையை மைய அரைத்து, அதனுடன் வெண்ணெய் சேர்த்து, குழைத்து அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின் மேல் பூச விரைவில் ஆறிவிடும். 8. சில கோவை இலைகளை நீரிலிட்டு, கொதிக்க வைத்து, ஆற வைத்து, நாட்பட்ட ஆறாத...