சிறந்த பணப்பயிர் அறிமுகம்

நோனி ( வெண்நுணா ) மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள் நோனி பழத்தில் உள்ளன. இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில் உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது. நோனி பழச்சாறு, செல்களின் துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்...