சிறந்த பணப்பயிர் அறிமுகம்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்நோனி பழத்தில் உள்ளன. இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில் உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.நோனி பழச்சாறு, செல்களின் துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப் போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. 1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.நோனி பழச்சாறு auto immune நோய் ஏற்பட்டுவிடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்குகிறது. நம்மைத் தினமும் நோய்க்கிருமிகள் தாக்கினாலும், நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. நம்முடைய உடம்பை, ஒரு ரசாயன உற்பத்திசாலை என்று சொல்லலாம்.நாம் பேசும்போதும், நடக்கும்போதும், கேட்கும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருள் மற்றொரு பொருளாய் ரசாயன மாற்றம் பெறுகிறது. நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான Nitric Oxide என்னும் வாயு, மாலிக்யூலை நம் உடல் உற்பத்தி செய்கிறது. நோனி பழச்சாறு நம் உடலில் போதுமான Nitric Oxide உற்பத்தியாவதற்கு உதவுகிறது. நம் உடம்பில் ரசாயன மாற்றங்கள் சரியாக நிகழும்போது நம் உடல்நோனி பழரசம் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் நோனி பழச்சாற்றை உட்கொள்ளும்போது, பழச்சாற்றில் இருக்கும் proxeronine நம் உடம்பில் இருக்கும் Proxeronase உடன் சேர்ந்து, Xeronine உருவாகிறது. இது, புரோட்டீன் செல்களை செம்மையாக வேலை செய்ய உதவுகிறது.நோனி பழச்சாறு ஆரோக்கியமான செல்களை ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்ற செல்களை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. அந்த வகையில் நோனி பழச்சாறு, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கும் பலனளிக்கிறது.நோனி பழச்சாறு சக்திவாய்ந்த adopt gin ஆக செயல்படுகிறது. Adopt gin என்பது, உடல் இயக்கத்தை சீராக வைக்கும் ஒரு பொருள். நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி இருக்கிறது. அதனால்தான் நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால் எந்த மருந்தும் நல்ல பலனைத்தராது. நோனி பழச்சாறு, இந்த தானாகவே குணமாகும் சக்தினை வலுப்படுத்துகிறது. அந்த வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. நோனிப்பழச்சாறு ஜீரண சக்தியைப் பெருக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
தமிழகத்தின் பூர்வீக மரமான வெண் நுணா என்னும் நோனி மரம்
மிகச் சிறந்த பணப்பயிர் இந்தியாவில் மறு அறிமுகம்
மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் கிராக்கி அதிகம்.தமிழகத்தின் வறண்ட பாலை யாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி எனும் கிராமத்தில், மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, கடந்த 6 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறார் விவசாயி சந்தவழியான்.அவர் ‘நோனி’ பற்றி ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதுராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு, எங்கள் குடும்பத்தினர் பரம்பரை வைத்தியர்களாக இருந்துள்ளனர். அதனால் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரங்கள், தாவரங்களைப் பற்றிய அறிவு பாரம்பரியமாக இருந்து வந்தாலும் நான் சித்த மருத்துவர் ஆகாமல் சென்னை நியூ காலேஜில் இன்டர்மீடியட் படித்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல ஊர்களுக்குச் சென்று பணிபுரிந்தேன்.
இந்தியாவில் மறு அறிமுகம்சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நோனியை மறு அறிமுகம் செய்தபோது மஞ்சனத்தி மர வகையைச் சார்ந்த வெண்நுணாவான நோனியின் மீது ஈர்ப்பு உண்டானது. அதன்பின்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் மூலம் நோனி பழக்கன்றுகளை 2008-ல் இறக்குமதி செய்து, தற்போது திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி கிராமத்தில் ஐந்தரை ஏக்கரில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வளர்த்து வருகிறேன்.நோனி ஜூஸ்நடவு செய்த ஒரே ஆண்டில் நோனி காய்ப்புக்கு வந்து விடும். நான்கு ஆண்டு வயது கொண்ட ஒரு மரத்தில் 40 கிலோ முதல் 80 கிலோ வரையிலும் ஆண்டுக்கு பதினொரு மாதங்கள் விளைச்சல் எடுக்கலாம். இதில் சுமார் 10 லிட்டர் வரையிலும் நோனி ஜூஸ் எடுக்கலாம். ஒரு மரம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலும் பலன் தரும்..மரங்களில் இருந்து பறித்த நோனி பழங்களை ஐந்து மணி நேரத்துக்குள் பெரிய டிரம்களில் போட்டு, அதிகபட்சம் 22 நாட்கள் வரையிலும் இருட்டறையில் வைக்க வேண்டும். பின்னர், கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து மூன்றுமுறை வடிகட்டினால் களி மாதிரி வரும். இதனை இரண்டு வாரங்கள் கழித்து ஜூஸ் ஆகப் பயன்படுத்தலாம்தற்போது மருந்துக்கடைகளில் நோனி ஜூஸ் ஒரு லிட்டர் ரூ. 1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள மோகத்தால் நாம் பாரம்பரிய மருத்துவ அறிவை இழந்து தவிக்கிறோம். நோனியின் பழம், வேர், இலைகள் என அனைத்தும் எதிர்மருந்தாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் சுரக்க நோனிப் பழச்சாறு சிறந்த மருந்தாகப் பயன்படக் கூடியது.மிகச் சிறந்த பணப்பயிர்ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் கடற்கரை ஓரங்களில் நோனி மரங்களை பயிரிடுகின்றனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்துக்கு மிகச் சிறந்த பணப்பயிராக நோனிப்பழ சாகுபடி இருக்கும். மேலும் ஒவ்வொருவரும், தமது வீட்டுத் தோட்டத்திலும் நோனி மரங்களை வளர்த்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தை மீட்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.
தற்போது நிறைய பேர் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். இன்று உடல் பருமன் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு பல்வேறு உணவுகள் உதவுகிறது. அதில் சில உணவுகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பலரும் அறியாத ஓர் பழம் தான் நோனி. இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் குடித்து வந்தால், அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.ஆனால் நற்பதமான நோனி ஜூஸ் கிடைப்பது என்பது அரிதானது. ஆனால் இதற்கு மாற்றாக நோனி கேப்ஸ்யூல் மற்றும் நோனி கூழ் பவுடர் போன்றவற்றை எடுக்கலாம். இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
நோனி நன்மைகள்
1. நோனி ஜூஸை அப்படியே குடிக்கலாம். ஆனால் இந்த நோனி ஜூஸை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து குடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதிலும் சில காய்கறி ஜூஸ் அல்லது பழச்சாறுகளுடன் சேர்த்து கலந்து குடித்தால், இந்த ஜூஸ் மிகவும் சுவையாக இருக்கும்.2. நோனி ஜூஸ் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுவோருக்கு ஏற்ற அற்புதமான ஒரு பானமாகும். இதை தினமும் குடித்து வந்தால், நிச்சயம் எதிர்பார்க்கும் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.3. நோனி ஜூஸ் உடலில் அமிலத்தன்மையை நிலையாக பராமரிப்பதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலில் அதிகப்படியான அமிலத்தன்மையால் சந்திக்கும் பல்வேறு நோய்களின் அபாயங்கள் மற்றும் திசுக்களின் பாதிப்பைக் குறைக்கும்.4. நோனி ஜூஸ் செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கிருமிகளை அழித்து, உடலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும். நோனி ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இந்த ஜூஸ், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, முறையாக செயல்படச் செய்யும்.5. நோனி ஜூஸ் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் நோனி ஜூஸைக் குடித்து வந்தால், இது கணையத்தின் ஆரோக்கியத்தை சீராகப் பராமரித்து, இன்சுலினை சரியான அளவு வெளியிடச் செய்யும்.6. நோனி ஜூஸ உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களான கல்லீரல், சிறுநீரகங்கள், இரைப்பை போன்றவற்றின் செயல்பாட்டை முறையாக நடைப்பெறச் செய்து, உடலுறுப்புக்களை சிறப்பாக செயல்படச் செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.7. நோனி ஜூஸை பெண்கள் அடிக்கடி குடித்து வந்தால், அது கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் மற்றும் மாதவிடாய் கால பிடிப்புக்களைத் தடுக்கும். அதோடு நோனி ஜூஸ் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீரான இடைவெளியில் நடைபெற உதவிப் புரியும்.8. நோனி ஜூஸ் பினியல் சுரப்பிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உடலில் மெலனின் தொகுப்பைப் பராமரிக்கிறது. மாகுலர் பிராந்தியத்தில் மெலனின் அளவுகளை பராமரிப்பதன் மூலம், மாகுலர் சீரழிவு மற்றும் குருட்டுத்தன்மையைத் தடுக்கலாம்.9. ஊட்டச்சத்து நிறைந்ததுநோனி ஜூஸில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இதன் விளைவாக உடலில் தொற்றுக்கள் மற்றும் நோய்களின் தாக்கம் குறையும். மேலும் இது உடலில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.10. அழற்சி எதிர்ப்பு பண்புகள்நோனி ஜூஸ் மூட்டு வலிகள் மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இந்த ஜூஸில் கால்சியம் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்11. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்நோனி ஜூஸில் உள்ள செலினியம், பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் சி போன்றவை ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, இரத்த நாள சுவற்றில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். முக்கியமாக இதில் உள்ள ஸ்கோபோலெதின் என்னும் பொருள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இது இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. ஆகவே உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையக் குறைக்கும்.12. குடல் பிரச்சனைகளை சரிசெய்யும்பல்வேறு குடல் பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், அல்சர், எரிச்சல் கொண்ட குடலியக்கம் மற்றும் இதர பிரச்சனைகள் அனைத்தும் நோனி ஜூஸை தொடர்ச்சியாக குடிப்பதன் மூலம் சரிசெய்யலாம். ஏனெனில் நோனி ஜூஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.பயன்கள்இவை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இருதய நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. இதில் உள்ள ஸ்கோபோலேடீன் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் குறைகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்தக் குழாய்கள் எளிதாக விரிவடைகின்றன.சுழற்சி மண்டலத்தை ஆரோக்கியமாக்குகிறது. இவை மூட்டு இணைப்புகள் நன்கு வேலைசெய்ய உதவுகிறது. நோனி இணைப்புகள் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது. இது கணையம் நன்கு இயங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கிறது. நோனி பழச்சாறு அருந்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட செல்கள் தானாக சரிசெய்யப்படுகிறது. நோனியானது பாதிப்படைந்த வலுவில்லாத செல்களை சீராக்க உதவுகின்றது. இது கணையத்திலுள்ள சரியாக செயல்படாத பீட்டா செல்களை சீராக்குதல் (அ) அவற்றுக்கு உதவுவதன் மூலமாக இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.நோனி இருதய செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது. மார்புச்சளி நோயைக் குணப்படுத்த உதவுகிறது. ஒவ்வாமை மற்றும் அழற்சியை சரிசெய்ய உதவுகிறது. ஹார்மோனை சமன் செய்கிறது. நரம்பு மண்டல பாதிப்பை குறைக்க உதவுகிறது.நோனி டீ: மலேரிய காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது. நோனி தாவரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் டிகாசன் மஞ்சட்காமாலை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலையில் ஏற்படும் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
*NONI PLANT**Uses Of Noni Tree And Its Parts*1. The bark and the roots are used to extract dyes of red and yellow color that are used to make batik and dye fabrics.2. The oil extracted from the seeds is used to treat skin inflammations, acne and to maintain skin hydration. It is also used as insect repellent and scalp insecticide.3. The wood is used to make canoes, boats and rafts, handles for tools, for light construction material and also as firewood.4. The leaves come handy for feeding livestock and silkworms while the fruit is used as pig feed.
*Nutrients And Compounds In Noni Fruit*
Noni fruit contains a variety of compounds like alkaloids, polysaccharides, scopoletin, lignans, flavonoids, damnacanthal etc.It also contains vitamins A &C, magnesium, iron, potassium, selenium, zinc, copper and sulfur.Noni contains a very beneficial alkaloid called Xeronine that increases the assimilation of nutrients in the body.Noni contains 40 times more xenonine than found in pineapple. It also contains proxeronine. In fact, noni contains over 150 nutraceuticals of which proxeronine, proxeroninaise and xeronine are very important.The proxeronine combines with proxeroninaise to produce xenonine. Xeronine helps to repair diseased cells and treat and prevent disease.Xeronine is found in tissues of microorganisms, plants, animals and humans.
*Some Health Benefits Of Noni*1. A poultice made of leaves of the noni tree and applied warm on boils helps to break them and provide relief. The leaves can also be applied on inflammations, abscesses and cuts for relief.2. The crushed fruit is used to treat mouth and gum infections, toothache and sore throat.3. The poultice of leaves is also used to relieve stiffness of joints, rheumatic inflammations and pain.4. Noni stimulates the immune system and boosts immunity. It also suppresses allergies and controls asthma.5. Noni reduces the brain damage in those affected with stroke.6. Noni lowers cholesterol and improves levels of HDL. It also lowers blood sugar levels.7. The various chemicals like limonene, glycosides, damnacanthol, polysaccharides help to fight cancer and reduce abnormal cells and their growth.8. Noni promotes skin health, improves elasticity and prevents free radical damage and has anti aging effects.9. Noni has analgesic effects, reduces pain and fever. It promotes longevity.10. Noni lowers blood pressure and lowers heart disease incidence.
*Make Noni Juice At Home*Making noni juice at home is quite simple. In a glass jar take a small amount of water and add a ripe noni fruit. Seal the jar tightly and allow to ferment naturally by letting it sit for a period of a week to 3 months. Once fully fermented strain through cheesecloth and store in the refrigerator.
As noni juice does not taste good alone, add other fruit juices or vegetable juices to make it palatable.
*Health Benefits Of Noni Juice*1. Noni juice reduces pain, inflammation and joint damage encountered in arthritis.
2. Unpasteurized noni juice exhibits anti cancer activity.
3. Fermented noni juice lowers LDL cholesterol and triglyceride levels.
4. It also reduces blood glucose levels, reduces insulin resistance and provides benefits for type 2 diabetic patients.
5. Noni juice's antoxidant property helped to lower total cholesterol, IDL cholesterol and homo-cysteine levels in heavy smokers who consumed the
juice for a month in a study undertaken.
6. Its anti obesity activity helps to lower weight as well as adipose tissue weight.
7. The juice intake prevents proliferation of Candida and Aspergillus, the causative organisms of fungal infections.
8. Noni juice helps to combat gout and gout like diseases.
9. Fermented noni juice has liver protective effects in diabetes and reduces fatty infiltration of liver and also protects the liver from the damaging effects of toxins.
10. It hastens wound healing in diabetes and also boosts immunity levels.Noni juice has anti bacterial activity and raises the body's capacity to fight bacteria.
*Noni Tea*1. Noni tea is prepared from its leaves. It contains enzymes and nutrients that promote health.2. Noni tea is used to detoxify the body, improve digestion boost immunity and provide energy to the body.3. It provides antioxidants that are valuable in preventing many diseases and preventing free radical damage.4. Noni tea is caffeine free yet makes the body and mind alert.
*Some Precautions*
1. Those on low potassium diets like people with liver and kidney problems should avoid consuming noni.2. Do not take noni if you are pregnant.
Comments
Post a Comment