இயற்கை மருத்துவம்

நாவல் பழம் நாவல் பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். நாவல் பழம் பயன்கள் தோல்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும். வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். பசியைத் தூண்டக்கூடியது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து. நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது. வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத...