இயற்கை மருத்துவம்

நாவல் பழம்

        நாவல் பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும்.

நாவல் பழம் பயன்கள்
  • தோல்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.
  • வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.
  • பசியைத் தூண்டக்கூடியது.
  • கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து.
  • நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
  • நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.
  • வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.
  • மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.
  • அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகும்.
  • பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
  • நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும்  நன்மைகள்.

1. நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும்.

2. நாவல் பட்டை சூரணத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி குழம்பு பதத்தில் வரும்போது அதை ஆறவைத்து மேல் பூச்சாக பூசி பற்றாகப் போட்டு வந்தால் வாத நோய் தணிந்து வலியும் குறையும்.

3. நாவல் பழ சாறு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் நெய் இரண்டையும் சம அளவாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாக சக்தி அதிகரிக்கும்

4. அடிக்கடி நாவல் பழத்தை சாப்பிடுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும். மேலும் சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும். 

5. நாவல் கொழுந்து மற்றும் மாவிலைக் கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்து சாப்பிடுவதால் சீதபேதி, ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்

6. நாவல் மரப்பட்டையை தூள் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் ஏற்பட்ட புண், பல்சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்றவை குணமாகும். மேலும் இந்த நீரை கொண்டு புண்களையும் சுத்தம் செய்யலாம்.

7.  நீரிழிவு நோய்:நாவல் பழத்தின் விதைகள் நீரிழிவு நோயை குணப்படுத்த சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும்.பின் ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடையும்.ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த பழம். இதனை தினமும் உண்டு வரும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் காக்கின்றது. 

8. மாதவிடாய்:முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும்.இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் மற்றும் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.




Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்