இயற்கை மருத்துவம்
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் என்ன நன்மை? பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக ’கோல்டன் மில்க்’ என்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு கோல்டன் பால் தான். நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன. அதில் மிக முக்கியநன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். 1. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது. 2. இதயத்திற்கு நல்லது : இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மிக முக்கியமான பொருள். கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும். இதயம் சீராக இயங்கி ஆரோக்கியமாக இருந்தாலே ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 3. போதுமான உறக்கம் : தினமும் இரவு 8 மணி நேர உறக்கம் என்பது உடலுக்கு தேவையான அடிப்படையான விஷயம். ஏனெனில் அந்த நேரத்தில்தான் உடல் நச்சு நீக்கி, பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடு...