இயற்கை மருத்துவம்

கண்டங்கத்திரி மூலிகை 1. கண்டங்கத்திரி இலைகளைப் பறித்து சுத்தமாக்கி இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து இளஞ்சூட்டில் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தவும். கோடைக்காலங்களில் நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க இந்தத் தைலத்தை உடல் முழுக்க மேற்பூச்சாக பயன்படுத்தலாம். 2. கண்டங்கத்திரி இலை சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி அதைதலைவலி, கீல்வாதம் போன்ற நோய்கள் குணமாக மேல் பூச்சாக பூசலாம். 3. கண்டங்கத்திரி இலை சாறுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி பூசி வந்தால் கால் பாதவெடிப்புகள் மறையும். 4. வெப்பமும் காரத்தன்மையுள்ள கண்டங்கத்திரி காய்களை உடைத்து விதைகளை நீக்கி சுத்தமாக்கி காரக்குழம்பு, சாம்பார் என் சமைத்து உண்ண, நெஞ்சில் சேர்ந்து உள்ள நாட்பட்ட சளியை அது வெளியேற்றும். குரல்வளையில் தேங்கியுள்ள சளியை நீக்கி சுவாசத்தை சீராக்குகிறது. இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பு அடைப்புகளையும் நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 5. கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி தூள...