50 நோய்க்கு மருந்து

*50 நோய் க்கு இயற்கை மருத்துவம் * *சளி, இருமல் நீங்க* திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள். இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். *உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்* இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி. இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும். *வாயு மருந்து* பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய். இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும். *பித்தம் அதிகம் இருப்பின்* இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி. இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம். *குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க* சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம். இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எ...