இயற்கை மருத்துவம்


நெல்லிக்கனி

            ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி.

நெல்லியில் இருக்கும் சத்துகள்

நெல்லி மரம் முழுமையும் மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது. சிறு சிறு இலைகள் கொண்டு கொத்துகொத்தாக காய்க்கும் சிறு நெல்லியும், பெரிய நெல்லிய அல்லது காட்டு நெல்லி இரண்டுமே நற்குணங் களைக் கொண்டிருக்கிறது. நெல்லி மரத்தின் பட்டை, வேர், இலை, பூ அனைத்துமே மருந்து பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது.

இதயம்

நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வுகளில் இரத்தக்குழாய்க ளில் ஏற்படும் அடைப்புகளை சீராக வைக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

சிறுநீரகம்

இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது. அதிகப்படியான நீர்ச்சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது. 

எலும்புகள்

இன்று கால்சியம் பற்றாக்குறையால் தான் குறைந்த வயதிலேயே மூட்டுவலி உண்டாகிறது. இந்த கால்சி யத்தை நிறைவு செய்யும் வகையில் நெல்லிக்கனியில் இருக்கும் கால்சியம் சத்துகள் செயல்படுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்துவந்தால் உறுதியான எலும்பை பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

பித்தப்பைக் கற்கள்

உணவு செரிமானமாகவும் அதிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்தை உடலுக்கு எடுத்துச்செல்வதிலும் பித்தநீர் செயல்படுகிறது. இந்த பித்தப்பை ஆரோக்கியமாக இருந்தால் பித்தப்பை கற்களை கரைக்கலாம். பித்தப்பை யில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.


வாய்ப்புண் வயிற்றுப்புண்

வாய்ப்புண்ணால் அவதிப்படும்போது நெல்லி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்பகுதியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும். நெல்லிச்சாறை வாய்ப் புண்ணில் படும்படி நன்றாக கொப்புளித்து பிறகு குடித்துவந்தால் வாய்ப்புண் மட்டுமல்லாமல் வயிற்றுப்புண் ணும் குறையும். பல் ஈறுகள் வலுப்பெறும்.


ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

இன்று பெரும்பாலானோருக்கு ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் உடல் சோர்வு, மன சோர்வு என்று பாதிக்கப்படுகிறார்கள். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து அல்லதுதேன் கலந்த நெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட மாதத்தில் ஹீமோகுளொபின் அளவு அதிகரிப்பதை பரிசோதனையில் உறுதி செய்துகொள்ளலாம்.


கண் பார்வை கூர்மையாகும்

இள வயதில் கண்ணாடி என்பது சகஜமாகி வருகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண் புரை வளர்தல், கண் கோளாறு இருப்பவர்கள் நெல்லிக்காயை உண்டுவந்தால் அதன் தீவிரம் குறைய ஆரம்பிக்கும். வயதான பிறகும் கூர்மையான கண் பார்வையைப் பெற விரும்பினால் நெல்லிச்சாறு நிச்சயம் கைகொடுக்கும்.

உடலில் வாதம் பித்தம் கபம் என்னும் மூன்றும் சமநிலையில் வைக்கவும், சரும அழகோடு உறுப்புகள் அழகையும் பரமரிக்கவும் உதவும் பொருள்களைத் தேடி வெளியில் செல்ல வேண்டாம். விலை குறைந்த நெல்லிக்கனியில் உயர்ந்த ஆரோக்கியம் இருக்கும் போது வேறு எதையும் தேடி செல்ல வேண்டியதில்லை.

உண்ணும் முறை

காலை ஒரு நெல்லிக்காய், இரவில் ஒரு நெல்லிக்காய் தினமும் உண்டு வரலாம்.

நெல்லிமுல்லி(காய்ந்த நெல்லி)

உடற்சூடு, ருது தோசும் ( மாத விளக்கு கோளாறு),  அஸ்தி சுரம்(எலும்பு சுரம்),  தாகம், இரத்த பித்தம், முத்திர எரிச்சல், ஆண் குறி கொப்பளம்,  மலசிக்கல், பித்த வாந்தி, பிற மேகம், விந்து நஷ்டம் ஆகியவை குணமாகும், ஆண்மை பெருகம் , பால்வினைக்கு நோய்க்கு மருந்தாவுகம் பயன்படுகிறது.

நெல்லிபவுடர், நெல்லி முல்லி( காய்ந்த நெல்லி) தினமும் காலை, மாலை 5 கிராம் உண்டு வரலாம். 

நெல்லிப்பட்டை வேர் 

புண்களுக்கு மேற்பூச்சாக மற்றும் மருந்தாகவும் , உடல் அழகு பெறவும் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பவுடரை மேற்பூச்சாக உடல் அழகு பெறவும், தோல் நோய் வராமல் தடுக்கும்.

அதே நேரம் தினம் ஒரு நெல்லிக்காயை உமிழ்நீரோடு கலந்து சாப்பிடலாம். ஆனால் நெல்லிச்சாறை அதிக அளவில் எடுத்துகொள்ளவும் வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நெல்லிக்கனிக்கும் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்