இயற்கை மருத்துவம்

எண்ணற்ற நன்மை தரும் எள்
எள்ளில் உள்ள சத்துக்கள் :
எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.
1. சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
2. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
3. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
4. கொழுப்பின் அளவை குறைக்கிறது
5. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
எள்ளின் மருத்துவ பயன்கள்
மாதவிடாய் : வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோய் : எள்ளு விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆர்த்ரிடிஸ் : தற்போது நிறைய பேர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இவர்கள் தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், முட்டுகள் மற்றும் இரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.
டி.என்.ஏ பாதிப்பு : ஆய்வு ஒன்றில் எள்ளு விதைகளில் உள்ள சீசேமோல் என்னும் உட்பொருள், கதிர்வீச்சுக்களால் ஏற்படும் டி.என்.ஏ பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் தவறாமல் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் : மற்றும் பதற்றம் எள்ளு விதைகள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் மன அமைதியை அதிகரிக்கும் வைட்டமின்களான தியாமின் மற்றும் ட்ரிப்டோபேன் போன்றவை செரடோனின் உற்பத்திக்கு உதவி, உடல் வலி, மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
எண்ணற்ற நன்மை தரும் எள் உட்கொள்ளும் விதம்:
1. எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.
2. எள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.
3. சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல் :
4. எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.
5. 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
6. ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.
நீரிழிவு நோய் கண்டவர்கள் : 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.
வாய் ஆரோக்கியம் : ஆயுர்வேதத்தின் படி, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் ஓர் வழி தான் ஆயில் புல்லிங். அதிலும் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பல் சொத்தை குறைந்து, வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.
இரத்த சோகை : வெள்ளை நிற எள்ளு விதையை விட கருப்பு நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இரும்பச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபட தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான தலைமுடி : எள்ளு விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் தலைமுடியைப் பராமரிப்பதுடன், தினமும் எள்ளு விதைகளை உட்கொண்டு வரவும் வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான தலைமுடியைப் பெறலாம்.
Comments
Post a Comment