விதைகளும் அவை தரும் பலன்களும்

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த விதைகளும் அவை தரும் பலன்களும்! பழங்களாக இருந்தாலும் காய்களாக இருந்தாலும் அதன் உள்ளே விதை இருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுவது தான் வழக்கம். ஆனால் இப்படி தூக்கியெறியப்படும் விதைகளின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் இனி அதை வீணடிக்கமாட்டோம். இனிப்பும் சுவையும் கொண்டவை மட்டும் தான் சாப்பிடத்தகுந்தவை என்ற எண்ணத்தால் தான் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை மறந்திருக்கிறோம். மருத்துவத்துறையில் விதைகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. உடலில் நோய்தாக்காமல் தடுக்ககூடிய தன்மையும் இதற்கு உண்டு. நோய் தீர்க்கும் வல்லமையும் இதற்கு உண்டு. பொதுவாக விதைகள் தாவர வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதைகள் ஒவ்வொன்றும் முளைக்கும் போதே எண்ணற்ற ஊட்டச்சத்துகள் விதைகளிலேயே சேமிப்பு பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது உணவுபொருளாகவோ, வேதிப்பொருளாகவோ இருக்கும் தன்மைக்கேற்ப மருத்துவத்தில் மருந்து பொருளாக பயன்படுகிறது. சர்க்கரை பொருள்கள், கொழுப்பு எண்ணெய், புரதங்கள் என விதைகளில் இருக்கும் பொருள்களின் தன்மை குறித்தே இதன் மருத்துவக்க...