இயற்கை மருத்துவம்
விளாம்பழம்
விளாம்பழம் மருத்துவ குணங்கள்:
காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடியதும், வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டதும், வாயு பிரச்னையை குணப்படுத்த கூடியதுமான விளாம்பழத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது விளாம் பழம். இதை, யானைகள் விரும்பி சாப்பிடும். விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை பயனுள்ளதாக விளங்குகிறது.
விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது. விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால்.
விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும். விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.
நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.
விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும்.
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை, இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே, எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி, பசியை உண்டு பண்ணும் ஆற்றலும், விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதிக்கு, விளாம்பழம் நல்ல மருந்து.
WOOD_APPLE
It is not as commonly found as other fruits. Secondly, its flesh has a rather unique smell and taste, somewhat like ripe tamarind. But the fact is that wood apple is a very nutritious fruit and is often used.
Indian Journal of Science said that wood apple has fibre, calcium, phosphorus, iron, zinc, copper, manganese, sodium, potassium, manganese and Vitamin C among others. Therefore, this fruit definitely qualifies as a super food.
Health benefits of wood apple:
Energy boost:
Instead of an energy drink, wood apple juice will do just fine as well. The juice can also improve organ activity and metabolism too. Also, it is high in protein and can help in muscle repair as well. More importantly, the juice is well known in India as a good way to beat the summer heat and can reduce flatulence.
Blood purification: A small quantity of wood apple juice with warm water is known to help in purifying the blood and help in removal of toxins. This, in turn, has the effect of reducing the load on the liver and kidneys.Additionally, thanks to wood apple being a good source of Vitamin C, it can help improve the immune system. This helps in fighting off infections.
Blood sugar control:
It is not just the fruit, but also other parts of the tree that have medicinal properties. For instance, the bark has something called Feronia gum, which can balance sugar levels in the blood by adjusting glucose and insulin levels
Good for digestion:
Drinking wood apple juice has several benefits for the stomach and digestive system. It helps in curing digestive problems like dysentery and diarrhoea.
It is also known to be a good remedy for constipation and helps relieve discomfort. It also has laxative properties. Apart from the above, it is beneficial for kidney and liver health because it can remove toxins. It can also relieve us of the common cold, a sore throat, cough and also help with the treatment of ear pain.
In some parts of the subcontinent, the pulp is mixed well with sugar, salt and chillies to make a tasty snack. This is a popular street food recipe. Apart from the above, wood apple pulp can be used to make chutneys and jams.
Comments
Post a Comment