செம்பருத்தி
செம்பருத்தி – மருத்துவ பயன்கள்
சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.
செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும்.
இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது.
மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப்படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
செம்பருத்திப் பூவின் கஷாயமானது நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3 இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு தொடர்ந்து குடிக்க இருமல் தீரும்.
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
கூந்தல் தைலம்
1. 400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
2. செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
3. செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
4. செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும், நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன.
*Hibiscus rosa-sinensis (Hibiscus)*
Benefits of Gudhal :
Hibiscus rosa sinensis popularly known as gudhal in North India is a flower having medicinal value and is used in Ayurveda for the same. The flower is edible and is consumed in many forms. Although the flower is not yet very popular among the masses but has effective results on skin and hair care.
The flower has remedial effects on spilt ends, dry hair and is good for people who color their hair frequently. It given smooth and shiny hair if applied with egg. The flower also cures hair fall when used with coconut oil and treats dandruff problems when used with fenugreek paste. It leaves the scalp nourished and healthy. It strengthens the roots, darkens hair color and reduces hair fall.
Gudhal leaves
Gudhal leaves contain antioxidants which help in preventing ageing symptoms and cancer. Hibiscus is consumed in form of tea extracts and is helpful in maintaining good health. The flower if consumed with buttermilk in summer, protects from heat. The antioxidant in gudhal leaves prevent the body from developing ulcers when consumed with water. It also helps in curing leucorrhea and increases immunity in the body.
The flower is rich in vitamin C and thus is effecting in curing cold, sore throat, cough and headache. It is used by females for soothing the hot flashes in times of menopause.
Gudhal plant
The anti-inflammatory substances together with vitamin C in the flower and gudhal plant help cure acne and soothe the skin making it healthier. It regulates fluid balance in the body and is used in Ayurveda to cure oedema and excess water retention in the body.
Consuming the flower helps in improving digestive system and maintaining healthy metabolism. It also maintain body temperature. The antioxidants regulate blood cholesterol making it a healthy choice for heart patients.
What Are the Health Benefits of Hibiscus Tea?
Antihypertensive mode:
Hibiscustea is super effective when it comes to heart and blood pressure issues. Studies have shown that taking hibiscus tea daily can lower systolic and diastolic blood pressure to many folds.
Cholesterol-lowering agent:
Hibiscus tea decreases your bad cholesterol (LDL) and increases the good cholesterol (HDL) and hence keeps your cholesterol levels in balance.
Weight loss aid:
The anti-cholesterol effects of hibiscus tea makes it an exceptionally fantastic weight loss aid. Hibiscus tea is used in many weight loss supplements and drinks. It lowers the fat storage’s and boosts metabolism hence contributing to weight loss.
*Immune system booster:*
The vitamin C rich nature of Hibiscus makes it a potent anti-oxidizing agent. The antioxidants in hibiscus tea boost the immune system making the body healthy and disease-free.
Vital organs protector:
Your heart, kidney, and liver are all benefited by the hibiscus tea. For kidneys, it prevents stone formation; for the heart, its lower pressure, and for organ, it detoxifies the toxins in the liver and prevents liver damage.
Anti-diabetic nature:
Diabetes is a prevalent medical complication these days. The species Hibiscus sabdariffa has shown to improve insulin sensitivity hence treating type 2 diabetes. It enhances the beta-cell activity and, in turn, helps in combating diabetes.
Maintains Healthy Teeth and Gums
Calcium present in roselle protects teeth by keeping the jaw bone strong and sturdy throughout your life, which in turn ensures tight fitting teeth where bacteria cannot thrive. Therefore, before your teeth and gums start giving you any trouble, be sure to maintain a calcium rich diet. Its intake should be high, especially at young ages, so that your children naturally grow up with strong teeth.
Healthy Pregnancy
Pregnant women should consume more iron rich foods than anyone else. So including iron rich food like roselle is quite beneficial for pregnant women as they require around 27 mg daily and this is often covered in a pre-natal multi-vitamin. Also, pregnant women should consider consuming more healthy fat and folate rich foods during pregnancy.
Treatment of the Common Cold
The plant consists of Vitamin C which helps to enhance the immune system of our body, which protects us from colds and coughs. Apart from that it facilitates the absorption of iron and thus strengthens the body’s resistance to infection. It also fights against viruses.
Comments
Post a Comment