விதைகளும் அவை தரும் பலன்களும்
பழங்களாக இருந்தாலும் காய்களாக இருந்தாலும் அதன் உள்ளே விதை இருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுவது தான் வழக்கம். ஆனால் இப்படி தூக்கியெறியப்படும் விதைகளின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் இனி அதை வீணடிக்கமாட்டோம்.
இனிப்பும் சுவையும் கொண்டவை மட்டும் தான் சாப்பிடத்தகுந்தவை என்ற எண்ணத்தால் தான் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை மறந்திருக்கிறோம்.
மருத்துவத்துறையில் விதைகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. உடலில் நோய்தாக்காமல் தடுக்ககூடிய தன்மையும் இதற்கு உண்டு. நோய் தீர்க்கும் வல்லமையும் இதற்கு உண்டு. பொதுவாக விதைகள் தாவர வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதைகள் ஒவ்வொன்றும் முளைக்கும் போதே எண்ணற்ற ஊட்டச்சத்துகள் விதைகளிலேயே சேமிப்பு பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
இது உணவுபொருளாகவோ, வேதிப்பொருளாகவோ இருக்கும் தன்மைக்கேற்ப மருத்துவத்தில் மருந்து பொருளாக பயன்படுகிறது. சர்க்கரை பொருள்கள், கொழுப்பு எண்ணெய், புரதங்கள் என விதைகளில் இருக்கும் பொருள்களின் தன்மை குறித்தே இதன் மருத்துவக்குணங்கள் அமைகிறது. அப்படியான விதைகளில் சிலவற்றையாவது தெரிந்துகொள்வோம்.
1. கருஞ்சீரக விதை
மூலிகை தாவரம் என்று இதை அழைக்கிறார்கள். கருஞ்சீரகத்தின் விதையில் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை.
இந்த விதைகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. இவை உடலுக்கு நன்மை கொழுப்புகளை உள்ளடக்கியது. அதோடு கெட்ட கொழுப்பையும் குறைக்க கூடியது. அதனால் தான் உடல் எடை குறைப்பில் இவை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரக விதையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இது சிறுநீரககற்கள் கரையவும், பித்தப்பை கற்கள் கரையவும் உதவும். உஅல் நச்சுக்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றும். ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகள் நெருங்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியது. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றக்கூடியது. எலும்பு மஜ்ஜை உற்பத்தியை அதிகரிக்கும். தோல் நோய்களுக்கு நல்ல மருந்து.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகக்கூடிய வலிஅவஸ்தையை குறைக்க பெருமளவு உதவும். தினமும் இல்லையென்றாலும் உணவில் வாரம் ஒருமுறையாவது கருஞ்சீரக விதையை சேர்த்து வருவது நன்மை தரும்.
2. கழற்சிக்காய் விதை
அண்டவாதம் என்னும் விதை வீக்க நோய்க்கு சிறந்த மருந்து கழற்சிக்காய் விதை. உடலில் உள்ள ஈரல் தான் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சை நீக்கி அழிக்கும். இந்த ஈரலுக்கு பலத்தை அளிக்க கழற்சிக்காய் உதவுகிறது. விதைவீக்க பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களுக்கு முட்டையின் வெள்ளைக்கருவில் இந்த பொடியை அரைத்து பற்று போட்டால் வீக்கம் மட்டுப்படும்.
விளக்கெண்ணெயில் இந்த விதைப்பொடியை சேர்த்து காய்ச்சி வடிகட்டி தைலமாக்கி வீக்கம் இருக்கும் விரைகள் மீது பூசி வந்தாலும் வீக்கம் நீங்கும். விரை வீக்கம் மட்டுமல்லாமல் உடலில் எங்கு வீங்கியிருந்தாலும் அந்த வீக்கத்தைக் குறைக்க கழற்சிக்காய் விதை உதவக்கூடும்.
3.தேற்றான் விதை
தேற்றா மரத்தின் விதையான இது தேற்றான் கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் நீரில் இருக்கும் அழுக்கை உறிஞ்சு நீரை தெளிவாக்க உதவுகிறது. கண்களுக்கு நன்மருந்தாக செய்லபடுகிறது. நீர்சுளுக்கு, நீர்க்கடுப்பு, சிறுநீர்த்தொற்று இருக்கும் போது நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் தேற்றான் விதை பொடி வாங்கி பசும்பாலில் அரை டீஸ்பூன் அளவு கலந்து குடித்து வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
4. பூசணி விதை

சிவப்பு,மஞ்சள், பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் பூசணிக்காய் உள்ளது. பூசணிக்காயின் சதைப்பகுதியை பயன்படுத்தினால் போதும் என்று விதைகளை வெளியேற்றிவிடுவது வழக்கம்.
பூசணி விதைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து புரதம், வைட்டமின் இ போன்றவையும், தாதுச்சத்துக்களான மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் சத்துகளும் நிறைவாக உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாக சத்து இன்றியமையாதது.
அதை பூசணி விதைகள் கொடுத்துவிடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை சரி செய்யவும். ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்யவும் இந்த விதையை பொடித்து குடித்துவரலாம். இவை விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும்.
5. வெள்ளரி விதை
வெள்ளரி பழங்களை விரும்பி சாப்பிடும் பலரும் வெள்ளரி விதைகளை பயன்படுத்து வதில்லை.வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மெக்னீஷியம், துத்தநாகம், வைட்டமின் இ உள்ளது.
சிறுநீர்ப்பாதையில் சதையடைப்பு, நீரடைப்பு, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும். சிறுநீர்பெருக்கி என்றும் இதை சொல்லலாம். சிறுநீர் பிரியாமல் கை, கால் வீக்கம் கொண்டிருப்பவர்கள் வெள்ளரி விதை சாப்பிட்டால் வீக்கம் குறைந்து உடல் இயல்பு நிலைக்கு திரும்பும். அழகு குறித்த பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் உணவில் கண்டிப்பாக வெள்ளரி விதை சேர்க்கலாம். இதனால் சருமம் பளபளப்பாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.
6. எட்டி விதை
எட்டி மரத்திலிருந்து பெறப்படும் இந்தவிதைகளில் தாவரங்களில் இருக்கும் வேதிப்பொருள்கள் அல்கலாய்டு உள்ளது. இது இயற்கை தாவரங்களிலிருக்கும் வேதிப்பொருள்கள் உள்ளது. வயிற்றுவலி, அடிவயிற்றுவலி. குடல் எரிச்சல், மன அழுத்தம் தலைவலி. மூச்சுத்திணறல் போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கும் மருந்தாக அல்க்லைடு உள்ளது. உடலில் உண்டாகும் வாத நோய்களுக்கு இந்த விதைகளை கொண்டு செய்யப்பட்ட தைலங்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பக்கவாதம், மூட்டுவாதம், கீல்வாதம் போன்ற நோய்களுக்கு எட்டி தைலம் பயன்படுகிறது.
7. பூனைக்காலி விதை
பார்க்கின்ஸன் என்னும் நடுக்குவாத நோய்க்கு பூனைக்காலி விதைகளால் நல்ல பலன் கிடைக்கிறது. இந்த விதைகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு விந்தணுக்களின் தரத்தையும் உறுதி செய்கிறது. நரம்புத்தளர்ச்சி இருப்பவர்களுக்கு அருமருந்து பூனைக்காலி விதை என்று சொல்லலாம்.
மேற்கண்ட விதைகள் தவிர ஆமணக்கு எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் விளக்கெண்ணெய், எள் விதையிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், ஓமவிதைகளிலிருந்து பெறப்படும் ஓமத்திரவம், சப்ஜா விதை, திராட்சை விதை, தர்பூசணி விதை. முருங்கை விதை, பரங்கிக்காய் விதை, அரச விதை, நாயுருவி விதை, ஆளி விதை, பப்பாளி விதை, அறுகீரை விதை.அலிசி விதை என இன்னும் இன்னும் பல விதைகள் நம் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவுகிறது.
எல்லாவகையான விதைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை. அதை வாங்கி சுத்தம் செய்டு வெயிலில் உலரவைத்து பொடி செய்து உணவுக்கு முன்பு ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் குடித்து வரலாம். இவை பக்கவிளைவில்லாது என்பதால் எல்லோரும் சேர்க்கலாம். அதிகம் சேர்க்க வேண்டாம்.
8. ஆளி விதை
உங்களுக்கு வாயுத் தொல்லை இருந்தால் இதனை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. மற்ற விதைகள் மற்றும் கொட்டைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.ஏனென்றால் ஆளிவிதையில் நார்ச்சத்து அதிகம் என்பதால் இதனை மட்டும் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஆளிவிதை இரவு தூங்க போகும் முன் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரை குடித்து வரலாம்.இரவு முழுவதும் ஊறுவதால் ஆளிவிதை மிகவும் மென்மையாகிவிடும்.இதனால் சாப்பிடுவதற்கு எளிமையான இருக்கும். பழச்சாறுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த கலோரி குறைந்த பானத்தை குடிக்கலாம்.
ஆளிவிதை சிலரால் அப்படியே மென்று சாப்பிட முடியாது என்பதால் பொடியாக அரைத்து வைத்து கொள்ளலாம். தினமும் 10-20 கிராம் ஆளிவிதை பொடியை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறைந்து, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
உங்களுக்கு பிடித்தமான சுவையில் எந்த ரெசிபியை வேண்டுமானாலும் செய்து அதில் இந்த ஆளிவிதை தூவி சேர்த்து கொள்ளலாம். உதாரணமாக ரெய்தா, சாலட், சப்பாத்தி மற்றும் பராத்தாவில் சேர்த்து சாப்பிடலாம்.
9. ஓமவிதை
சிறிய நறுமணமிக்க மூலிகை விதை ஓமம். ஓமம் அனைத்து சமையலறையிலும் இருக்கும் பொருள். ஓமம் இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது. ஓம விதை உணவுக்கு மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, ஆரோக்கிய நன்மைகளடக்கியது. செரிமானத்தை சீராக்க, பல், காதுவலி சரி செய்வது உள்ளிட்ட நன்மைகளை வழங்கும். ஓமத்தை உணவில் சேர்த்து வரலாம்,நீரில் ஊற வைத்து குடித்தும் வரலாம்.
10. சப்ஜா விதை
திருநீற்றுப்பச்சிலை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
11. திராட்சை விதை
கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.திராட்சை விதையில் உள்ள உட் கூறு ஒன்று புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உடையது என்பதுடன், அந்த உட்கூறு நல்ல ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டு பிடித்துள்ளார்.
உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.
வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.
நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது. இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன் ஏதும் இல்லை.
12. தர்பூசணி விதை
92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை ஊர் பக்கங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள். உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவோம். அப்படியே தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டாலும் வயிற்றுக்குள் செடி வளரும் என 90ஸ் கிட் பரிதாபங்கள் வேறு..! ஆனால் உண்மையில் அது பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியது என்பது தெரியுமா..?
தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
13. முருங்கை விதை
முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்ப்பதுண்டு.
பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.
இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்
முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும்.
பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.
14. பரங்கிக்காய் விதை
பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். பரங்கி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இதில் இருக்கும் ஒரு வகை கொழுப்பு அமிலம், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.
பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோய்க்கு இது நல்ல மருந்தாகும்.
15. அரச விதை
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் அரச விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் அரசன் இது . இதன் விதை விந்து விருத்தியையும் தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்” என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று , கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி , கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது .பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது .இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
16. நாயுருவி விதை

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.
17. பப்பாளி விதை

பப்பாளி விதையில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃப்ளேவனாய்டு மற்றும் பாலிஃபினால் இருப்பதால், இருமல், சளி மற்றும் நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
பப்பாளி விதைகளில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு இருதய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
பப்பாளி விதையில் ப்ரோடியோலைடிக் என்சைம் இருப்பதால் குடலில் உள்ள பாக்டீரியா மற்றும் பாராஸைட்களை அழித்து வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மாதவிடாய் காலத்தில் பப்பாளி விதையை சாப்பிடுவதால் வயிறு மற்றும் இடுப்பில் ஏற்படும் தசை வலி குணமாகும்.
18. அறுகீரை விதை

அறுகீரை விதைகளை நல்லெண்ணெயுடன் கூட்டி காய்ச்சி தைலம் வடித்து தேய்த்து வர தலைவலி குணமாகும். தலை முடி நன்கு கறுத்து வளரும்.
19. சணல் விதை
தினமும் சணல் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் பசியை நமது கட்டுப்பாட்டில் வைக்கும். கீழ்வாதப் பிரச்சினைகள் சரியாகும். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
சணல் விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, மனநோய்க்கான எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்திற்கு சிறந்தது. உங்களது முடி, நகங்கள் மற்றும் சருமத்திற்கு சிறந்தததாகவும் உள்ளது.

Comments
Post a Comment