Posts

வில்வம்

Image
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்..! தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள்.  இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று. பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும். திரிதளஞ்ச; திரிகுணாகாரம்; திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்; திரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம் என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம். வில்வத்தின் விஞ்ஞான குணம்: ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலை...

வெற்றிலை

Image
                                                                               வெற்றிலை வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!!! வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச்செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது.  உண்மையில் வெற்றிலைபோடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத்தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்!  அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை!! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் ப...

விதைகளும் அவை தரும் பலன்களும்

Image
  நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த  விதைகளும் அவை தரும் பலன்களும்! பழங்களாக இருந்தாலும் காய்களாக இருந்தாலும் அதன் உள்ளே விதை இருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுவது தான் வழக்கம். ஆனால் இப்படி தூக்கியெறியப்படும் விதைகளின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் இனி அதை வீணடிக்கமாட்டோம். இனிப்பும் சுவையும் கொண்டவை மட்டும் தான் சாப்பிடத்தகுந்தவை என்ற எண்ணத்தால் தான் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை மறந்திருக்கிறோம். மருத்துவத்துறையில் விதைகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. உடலில் நோய்தாக்காமல் தடுக்ககூடிய தன்மையும் இதற்கு உண்டு. நோய் தீர்க்கும் வல்லமையும் இதற்கு உண்டு. பொதுவாக விதைகள் தாவர வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதைகள் ஒவ்வொன்றும் முளைக்கும் போதே எண்ணற்ற ஊட்டச்சத்துகள் விதைகளிலேயே சேமிப்பு பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது உணவுபொருளாகவோ, வேதிப்பொருளாகவோ இருக்கும் தன்மைக்கேற்ப மருத்துவத்தில் மருந்து பொருளாக பயன்படுகிறது. சர்க்கரை பொருள்கள், கொழுப்பு எண்ணெய், புரதங்கள் என விதைகளில் இருக்கும் பொருள்களின் தன்மை குறித்தே இதன் மருத்துவக்க...

மாதுளம்பழம்

Image
 *பிரமிக்கவைக்கும் மாதுளை!* பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது.  மாதுளை தரும் 14 பிரமாதப் பலன்கள் 1. உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். 2. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான  ஆற்றல் கிடைக்கும். 3. மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும். 4. மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்...

செம்பருத்தி

Image
செம்பருத்தி – மருத்துவ பயன்கள் சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது. செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு,  பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். செம்பருத்தி பூக்க...

சாமை

Image
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை. இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. விளைநிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன. சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில் தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப்பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக் கொண்டாலும் ஆபத்து இல்லை. இப்போது கடினமான மேல் தோல் நீக்கிய சாமை கிடைக்கிறது. இதை உபயோகிக்கும் போது தோல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசியைப் போலவே பல உணவுகளை சமைக்க சுலபமாகப் பயன்படுத்த முடியும். வாங்கும் போது பார்த்தாலே இ...

நெருஞ்சில்

Image
நெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்..! நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது.  மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும். இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. . இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர். பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்துகெட்டியாகிவிடும் . பார்ப்பதற்கு அதிச...