மூலிகை மருத்துவம்
கொத்தமல்லி செடி
கொத்தமல்லி, அதன் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளுக்காக மிகவும் பிரபலமானது ஆகும். யு.எஸ்.டி.ஏ -வின் படி, 100 கி கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள், இந்த அட்டவணையில் உள்ளவாறு இருக்கின்றன.
100 கிராம் கொத்தமல்லி தழையில் உள்ள ஊட்டச்சத்து அளவு
கார்போஹைட்ரேட்கள் 3.67 கி
உணவுசார் நார்ச்சத்து 2.80 கி
கொழுப்புகள் 0 கி
கொழுப்பு 0.52 கி
புரதம் 2.13 கி
வைட்டமின்கள்
வைட்டமின் ஏ 67.48 மி.கி
வைட்டமின் சி 27 மி.கி
வைட்டமின் இ 2.50 மி.கி
வைட்டமின் கே 310 மி.சி.கி
தியாமின் 0.067 மி.கி
நியாசின் 1.114 மி.கி
ரிபோஃபிலாவின் 0.162 மி.கி
பைரிடாக்சின் 0.149 மி.கி
பென்டோதெனிக் அமிலம் 0.570 மி.கி
தாதுக்கள்
கால்சியம் 67 மி.கி
மெக்னீஷியம் 26 மி.கி
இரும்புச்சத்து 1.77 மி.கி
மாங்கனீஸ் 0.426 மி.கி
செலீனியம் 0.9 மி.கி
பாஸ்பரஸ் 48 மி.கி
துத்தநாகம் 0.50 மி.கி
எலெக்ட்ரோலைட்டுகள்
பொட்டாசியம் 521 மி.கி
சோடியம் 46 மி.கி
கொத்தமல்லி தழையின் நன்மைகள்
கொத்தமல்லி செடியின் மொத்த உடல் பாகமும், பல்வேறு பயன்களையும் மற்றும் நன்மைகளையும் கொண்டிருக்கிறது. இருந்தாலும், மிகவும் சிறந்த பயனைக் கொண்டிருக்கும் அந்த தாவரத்தின் பாகம், கொத்தமல்லியின் தழைகள் ஆகும். கொத்தமல்லி தழைகளின் பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் கீழே காணலாம்.
சிறுநீரகத்துக்காக கொத்தமல்லி தழைகள்
கொத்தமல்லியில், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மற்றும் மெக்னீஷியம் போன்ற தாதுக்களின் தொகுதி காணப்படுகிறது. கொத்தமல்லி தழைகளில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பீட்டா-கெரட்டின் (வைட்டமின் ஏ உருவாக்கத்துக்குப் பொறுப்பான ஒரு நிறமி) போன்ற, தகுந்த உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான வைட்டமின்கள் காணப்படுகின்றன. கொத்தமல்லி தழைகள், ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, சிறுநீர் வெளியேறும் அளவை அதிகரிப்பது, மற்றும் உடலில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை வெளியேற்றுவது ஆகியவற்றின் மூலம், சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் நடைமுறையில் உதவுகின்றது.
கொழுப்பை அளவுகளை முறைப்படுத்த
கொத்தமல்லியில் உள்ள உயிரி செயல்பாட்டு மூலக்கூறுகள், சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளாக செயல்படுகின்றன. இந்த மூலக்கூறுகள் உடலில் உள்ள கொழுப்பை அளவுகளை முறைப்படுத்த உதவுகின்றன. இதயநாள நோய்களை உடைய நோயாளிகளுக்கு, கொத்தமல்லியின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக, குறை-அடர்த்தி கொழுப்பு (எல்.டி எல்) மற்றும் மிக-குறைந்த-அடர்த்தி கொழுப்பு (வி.எல்.டி.எல்) அளவுகள், குறைந்த சதவிகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
மேலும் கொத்தமல்லி, இரத்தத்தில் உள்ள டிரைகிளிஸெரைட்களை குறைப்பதன் மூலம் கொழுப்பு அளவுகளைக் குறைக்கவும், மற்றும் நல்ல கொழுப்பு எனவும் அறியப்படும், உயர்-அடர்த்தி கொழுப்பு அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
கல்லீரலுக்காக கொத்தமல்லி தழைகள்
மனித உடலில் நடைபெறும் முக்கிய வளர்சிதை மாற்றங்களில் மிக அதிகமானவை, கல்லீரல் மூலம் நடைபெறுகின்றன. கோரியண்டிரம் சாட்டிவும், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை செறிவாகக் கொண்டுள்ளதால், கேட்டலஸ், குளுட்டாதியோன் பெராக்சிடேஸ், மற்றும் சூப்பராக்ஸைட் டிஸ்முடேஸ் போன்ற குறிப்பிட்ட நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக, ஒரு ஈரல் பாதுகாப்பு (கல்லீரலைப் பாதுகாக்கிறது) பொருளாக செயல்படுகிறது. இந்த நொதிகள், ஹைட்ராக்சில் சேதாரக் கூறுகள் (சேதாரத்தை உருவாக்கும் காரணிகள்) போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த காரணிகளை நீக்குவதிலும், மற்றும் கல்லீரலின் முறையான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நல்ல நினைவாற்றலுக்காக கொத்தமல்லி தழைகள்
நினைவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் கொத்தமல்லியின் உதவியின் முக்கியமான அம்சம், அசிட்டைல்சோலின் என்ற ஒரு நரம்பியல் கடத்தியை (நரம்புகளின் சமிஞ்கைகளை அனுப்புவதில் உதவுகிறது) சேதப்படுத்துகிற, சோலிநெஸ்டரைஸ் நொதியை (மைய நரம்பு மண்டலத்தில் காணப்படும் ஒரு நொதி) தடுப்பது ஆகும்.
அசிட்டைல்சோலின், உடலில் உள்ள தசை செல்களின் செயல்பாட்டுக்கு அவசியமான ஒன்றாகும். கொத்தமல்லி, சோலிநெஸ்டரைஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிற, மற்றும் அசிட்டைல்சோலின் உற்பத்தியை ஊக்குவிக்கிற வகையில், மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தத்துக்காக கொத்தமல்லி தழைகள்
கொத்தமல்லி தழைகளை சேர்த்து தயாரிக்கப்படும் பழக்கூட்டு, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பது, அடிக்கடி கண்டறியப்பட்டு இருக்கிறது. கொத்தமல்லி, இரத்த அழுத்தத்தை விடுவிக்கிற பொறுப்பையுடைய அசிட்டைல்சோலினுடன் வினை புரிகின்ற கால்சியத்தை செறிவான அளவில் கொண்டிருக்கிறது. அதனால், கொத்தமல்லி எடுத்துக் கொள்வது, இரத்த அழுத்த அளவுகளைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. கொத்தமல்லியின் இந்தப் பண்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு இதயநாள (இதயம்) பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது.
ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளாக கொத்தமல்லி தழைகள்
இந்த நச்சுத்தன்மை மிக்கவற்றுக்கு எதிர்வினையாக, செல்களை சேதப்படுத்தக் கூடிய சேதார மூலக்கூறுகளை உடல் உற்பத்தி செய்கிறது. அது நாளடைவில், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. கொத்தமல்லி ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் நல்ல ஒரு ஆதாரம் ஆகும். கொத்தமல்லி தழைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, குளுட்டாதியோன் போன்ற பல ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் செயல்பாட்டின் வழியாக, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, மற்றும் சேதார மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது.
கொத்தமல்லி தழைகள் சாற்றின் நன்மைகள்
பச்சை கொத்தமல்லி தழைகளில் இருந்து நீரில் தயாரிக்கப்படும் சாறு, பல்வேறு ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. மேலும், கொத்தமல்லி தழைகளை அரைத்து, அதை மற்ற உட்பொருட்களுடன் கலந்து, பல்வேறு கஷாயங்கள் (கலவைகள்) தயாரிக்கப்பட்டு, அவை பலவித ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கொத்தமல்லி தழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாற்றில் இருந்து பெறப்படும் முக்கியமான நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டு உள்ளன.
எடைக் குறைப்புக்காக
கொத்தமல்லி தழைகளின் அத்தியாவசிய எண்ணெய்கள், விரும்பத்தகாத நுண்ணுயிரிகளை அழிப்பது, மற்றும் வயிறு வீங்குதலுக்குக் காரணமான நச்சுப்பொருட்களை நீக்குவது ஆகியவற்றின் மூலம், இரைப்பையை சுத்தம் செய்ய உதவுகின்றன.
மேலும், கொத்தமல்லி தழைகளில் உள்ள பாலிஃபெனொல்கள், கொழுப்புகளை எதிர்த்துப் போராட மற்றும் அவற்றின் சேர்மானத்தைத் தடுக்க உதவுகின்றன. கொத்தமல்லி தழை சாற்றின் இந்தப் பண்புகள் அனைத்தும் சேர்ந்து, தனி நபர்களுக்கு உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கின்றன.
முடி உதிர்வுக்காக
கொத்தமல்லி தழை சாறு அல்லது பசை, முடி உதிர்வைத் தடுக்க உதவக் கூடியதாகும். கொத்தமல்லி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் கே ஆகிய வைட்டமின்களை செறிவாகக் கொண்டுள்ளது. கெரட்டின் என்பது, முடிகளின் வேர்க்கால்களை வலிமையாக்கவும், மற்றும் உடைவதில் இருந்து முடிகளைப் பாதுகாக்கவும் தேவைப்படுகிற ஒரு புரதம் ஆகும். கேரட்டின் உற்பத்திக்கு வைட்டமின் கே மிகவும் அத்தியாவசியமானது ஆகும். கொத்தமல்லி தழை சாறு அருந்துவது, கேரட்டின் உற்பத்தி மற்றும் சேர்மானத்துக்கு உதவி செய்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் அது முடிகளுக்கு அதிக அடர்த்தி, மற்றும் பளபளப்பை (பொலிவு) வழங்குகிறது.
ஆரோக்கியமான சருமத்துக்காக
கொத்தமல்லியின் தழைகள் சாறாக அருந்தப்படும் பொழுது, அல்லது ஒரு பசை போன்று தடவப்படும் பொழுது, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கக் கூடியதாகும். எண்ணெய்ப்பசை நிறைந்த சருமத்தைக் கொண்டவர்களும் கூட, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த, கொத்தமல்லி தழை சாறு அல்லது பசையைப் பயன்படுத்தலாம். கொத்தமல்லி தழை சாறு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அது, எண்ணெய்ப்பசை அதிகமான சருமம், மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற, நுண்ணுயிர் மற்றும் பூஞ்சையை நீக்குகின்ற ஒரு சுத்தப்படுத்தியாக செயல் புரிகிறது.
கொத்தமல்லியின் மருத்துவப் பயன்கள்
கொத்தமல்லி, மேலே குறிப்பிடப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைத் தவிர்த்து, பல்வேறு நோய்களுக்கான, பல்வேறு பயன்மிக்க மருத்துவ நன்மைகளைக் கொண்டிருக்கிறது. கொத்தமல்லியின் மருத்துவப் பயன்களைப் பற்றி கீழே விரிவாக விவரிக்கப்பட்டு இருக்கிறது.
உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது: கொத்தமல்லி, நமது உடலின் இயற்கை நச்சுத்தன்மை நீக்கி உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் அது, சிறுநீர் வெளியேறுவதை அதிகரித்து, இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதை அதிகரிக்கிறது.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: கொத்தமல்லி தழைகள் மூளையின் மீது, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது எனக் கண்டறியப்பட்டுள்ள, ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, ஒரு மன அழுத்த எதிர்ப்பு, மற்றும் மனச்சோர்வு எதிர்ப்பு விளைவை அளிப்பதுடன், கூடவே நரம்பு சிதைவு நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது: கொத்தமல்லியின் நச்சுத்தன்மை நீக்கும் விளைவுகள், அதனை ஒரு மிகச் சிறந்த எடைக் குறைப்பு நிவாரணியாக ஆக்குகிறது. மேலும் அது, உடலில் ஏற்படும் கொழுப்பு சேர்மானத்தைக் குறைக்கிறது மற்றும் இரைப்பை நுண்ணுயிரிகளை மேம்படுத்துகிறது. அதன் மூலம் உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது.
சருமத்துக்கான நன்மைகள்: கொத்தமல்லி பசை அல்லது சாறு, உட்கொள்ளப்படும் பொழுது அல்லது மேற்பூச்சாகத் தடவப்படும் பொழுது, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைப்பதாக அறியப்படுகிறது. மேலும் அது, சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்சைகளையும் குறைக்கிறது, மற்றும் குறிப்பாக எண்ணெய்ப் பசை மிக்க சரும வகைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது.
வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது: கொத்தமல்லி, மேல்வாயை சுத்தம் செய்து, வாய் துர்நாற்றத்தைக் குறைக்கிற இயற்கையான ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும். மேலும் அது, வாய்ப் புண்களைக் குணப்படுத்துவதிலும் திறன்மிக்கதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்களுக்காக: கொத்தமல்லி, யு.டி.ஐ அறிகுறிகளைப் போக்குவதில் இரட்டை நன்மையைக் கொண்டிருக்கிறது. அது, உடலில் இருந்து நோய்க்கிருமிகளை வெளியேற்றுவதில் உதவுவதோடு மட்டும் அல்லாமல், சிறுநீர்ப் பாதையில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
மூட்டழற்சிக்காக
கோரியண்டிரம் சாட்டிவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. கொத்தமல்லியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, மூட்டழற்சி போன்ற நோய்களைக் குணமாக்குவதில் மிகவும் திறன்மிக்கதாக இருக்கிறது. முடக்குவாத மூட்டழற்சி உள்ள நோயாளிகள், கடுமையான தோல் வீக்கங்கள் மற்றும் தோல் திரட்சிகளால் பாதிக்கப்படுகின்றனர். கொத்தமல்லி சாறு, அசௌகரியத்தைக் குறைக்கக் கூடிய வகையில் தோல் வீக்கத்தைக் குறைக்கவும், மற்றும் சரும தோற்றத்தை மேம்படுத்தவும் உதவக் கூடியது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
அல்சைமர் நோய்க்காக
எடுத்துக் கொள்ளும் அளவை சார்ந்த ஒரு முறையில் கொத்தமல்லியை எடுத்துக் கொள்வது, அல்சைமர் போன்ற நரம்பு சிதைவு கோளாறுகள் (நரம்பு மண்டலத்தின் சிதைவு) ஏற்படுவதைத் தடுக்கக் கூடியது ஆகும். நரம்பியல் சமிஞ்கை கடத்தியான அசிட்டைல்சோலின் பற்றாக்குறை, அல்சைமர் ஏற்படக் காரணம் ஆகிறது. அசிட்டைல்சோலின், தசைகளின் இயக்க செயல்பாடுகளுக்கும் தேவைப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதில் ஏற்படும் சிதைவு, முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும். கொத்தமல்லி, அசிட்டைல்சோலின் சேதமடையக் காரணமான சோலிநெஸ்டெரெஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், இந்த நோயைத் தடுக்க உதவுகிறது.
மனப்பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்காக
கொத்தமல்லி அதன் மனச்சோர்வு எதிர்ப்பு பண்புகளுக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்சைமர் நோயின் மீது கொத்தமல்லியின் விளைவுகளை ஆராய்ந்த வல்லுனர்கள், மனப்பதற்றத்துக்கு சிகிச்சையளிப்பதில் அதன் திறன்மிக்க பயன்களைக் கணடறிந்து இருக்கிறார்கள். அந்த ஆய்வில், கொத்தமல்லியின் ஆவியாகக் கூடிய எண்ணெயை நரம்பு மண்டல நோய்கள் உள்ள நோயாளிகளுக்குக் கொடுப்பது, மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தத்துக்கு எதிராக எதிர்வினை புரியவும் உதவக் கூடியது எனக் கண்டறியப்பட்டது. முக்கியமாக இது, மூளை செல்களின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டில் ஒரு அதிகரிப்புக்குக் காரணமாகக் கூடிய, குளுட்டாதையோன் அளவுகள் குறைவதன் காரணமாக நடைபெறுகிறது. அதன் மூலம், கொத்தமல்லி, மனப்பதற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைக் குறைக்கிறது.
புற்றுநோய்க்காக
கொத்தமல்லி பிறழ்வு-எதிர்ப்பு (புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எழுப்பக் கூடிய பிறழ்வுகளைக் குறைக்கிறது) பண்பைக் கொண்டிருப்பதால், அது புற்றுநோய்க்கு எதிராக செயல்புரிவதாகக் கூறப்பட்டு இருக்கிறது. ஒரு ஆய்வில், கொத்தமல்லியின் சாறு, டி.என்.ஏ -வில் ஏற்படுகின்ற பிறழ்வுகளை, குறிப்பாக புற்றுநோயூட்டும் (புற்றுநோய்க்கு காரணமாகின்ற) பிறழ்வுகளைக் குறைக்கின்ற திறனைக் கொண்டிருப்பதால், அது பிறழ்வு எதிர்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது எனக் கண்டறியப்பட்டு உள்ளது. கொத்தமல்லியின் இந்தத் திறன், ஒரு புற்றுநோய் எதிர்ப்பு காரணியாக செயல்படுகிறது. இருப்பினும் அது, விவோவில் பரிசோதிக்கப்பட வேண்டி இருக்கிறது.
தோல் அரிப்புகள் மற்றும் ஒவ்வாமைகளுக்காக
கொத்தமல்லி அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காகப் பிரபலமாக அறியப்பட்டிருக்கிறது. கொத்தமல்லியின் சாறு, அரிப்பு, அழற்சி, தோல் அரிப்புகள் மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்படுகின்ற ஒவ்வாமைகளுக்கு சிகிச்சை அளிக்க, ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. கொத்தமல்லி சாறு, தீப்புண்கள், சளிக் காய்ச்சல் (ஒவ்வாமை நாசி அழற்சி) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் திறன்மிக்கதாக இருப்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்களுக்காக
சிறுநீர் பாதை நோய்த்தொற்று (யு.டி.ஐ) முக்கியமாக, சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களின் காரணமாக ஏற்படுகிறது. பல்வேறு பாரம்பரிய நாட்டு மருத்துவங்களில் கொத்தமல்லி, அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சிறுநீர் பெருக்கி பண்புகள் மற்றும், கூடவே, மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நோய்க்கிருமிகளால் ஏற்படும் பல்வேறு யு.டி.ஐ -களுக்கு எதிரான அவற்றின் செயல்திறன் காரணமாகவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரோக்கியமான கண்களுக்காக
கொத்தமல்லி, பார்வைத்திறனில் உதவுகின்ற கண்களின் தண்டு மற்றும் கூம்பு செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் ஏ -யின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும். கொத்தமல்லியில் இருக்கின்ற அதிக அளவு வைட்டமின் ஏ, கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் அது, மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. கொத்தமல்லியில் இருக்கின்ற வைட்டமின் ஏ, பீட்டா-கெரட்டின் (வைட்டமின் ஏ உற்பத்தி செய்ய காரணமான காரணி) வடிவத்தில் உள்ள கெரொட்டினாய்டுகளில் இருந்து கிடைக்கிறது, அதனால் மிக அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும் கூட, அது நச்சுத்தன்மையை உருவாக்காது.
வாய் சுகாதாரத்துக்காக
வாய் சுகாதாரத்துக்காக கொத்தமல்லியைத் தனியாகவோ, அல்லது கிராம்பு போன்ற மற்ற சுத்திகரிக்கும் காரணிகளுடன் இணைந்த கலவையாகவோ, மிகவும் திறன்மிக்க வகையில் பயன்படுத்த இயலும்.கொத்தமல்லியில் இருக்கின்ற சிட்ரோநெலோல் எனப்படும் அத்தியாவசிய எண்ணெய், கிருமிநாசினியாக செயல்படுகிறது. இந்தப் பண்பு, வாய்ப்புண்களைக் குணப்படுத்த மற்றும் சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது. கொத்தமல்லி பசையைத் தடவுவதன் மூலம், வாய்ப் புண்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுண்ணுயிர் நோய்த்தொற்றுக்களுக்காக
கொத்தமல்லி, அதன் அத்தியாவசிய எண்ணெய்யில் நீண்ட-வரிசை ஆல்டிஹைட்களைக் கொண்டிருப்பதன் காரணமாக, பல்வேறு நுண்ணுயிர் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவக் கூடியது ஆகும். பல்வேறு தொடர்ச்சியான நோய்த்தொற்றுக்களின் தொகுப்புக்கு காரணமாகக் கூடிய லிஸ்டெரியா மோனோசைட்டோஜென்கள், எஸ்செரிச்சியா கோலி, பாகில்லஸ் சப், ஸ்டாஃபிலோகஸ் அவுரஸ், மற்றும் கேண்டிடா அல்பிகன்ஸ் போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களினை, கொத்தமல்லி உட்கொள்வதன் மூலம் தடுக்க இயலும்.
உணவு நஞ்சாதலைத் தடுக்க கொத்தமல்லி
கொத்தமல்லியை உட்கொள்வது, இரைப்பையை சுத்திகரிக்க, மற்றும் நுண்ணுயிர் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் காரணமாக, மற்றும் அதன் வழியாக, விரும்பத்தகாத நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழையலாம். கொத்தமல்லியின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், உணவில் தொன்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் எந்த வகையான உணவு நஞ்சாதலையும் தடுப்பதற்கும், மற்றும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறது.
அடர்த்தியான உலோகங்களை நீக்குவதற்காக கொத்தமல்லி
ஒரு ஆய்வின் படி, கொத்தமல்லி, சுற்றுச்சூழல் மாசுவின் காரணமாக, உடலில் காணப்படும் நச்சுத்தன்மை மிகுந்த அடர்த்தியான உலோகங்களை நீக்குவதற்கு, மற்றும் அவற்றின் காரணமாக ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கு உதவக் கூடியது ஆகும். காரீயம், காட்மியம், அர்செனிக், பாதரசம் போன்ற அடர்த்திமிகு உலோகங்கள், உடலில் உள்ள இயற்கையான அழுத்தத்தைப் போக்கி, ஹெர்பெஸ் சிம்ப்ளெக்ஸ் மற்றும் சால்மிடியா டிராச்சோமோட்டிஸ் போன்ற நோய்க்கிருமிகளால், மறுபடி மறுபடி ஏற்படும் நீடித்த தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில், பல்வேறு முக்கிய உறுப்புகளின் சேதத்துக்கு காரணமாகின்றன. கொத்தமல்லி, அவை போன்ற நச்சுத்தன்மை கொண்ட உலோகங்களை, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு அதிக ஒத்துழைப்பை அளிக்க வைக்க, உதவக் கூடியதாகும்.
எவ்வாறு கொத்தமல்லி சாறு தயாரிப்பது
ஒரு கையளவு கொத்தமல்லி தழைகள், முழுவதும் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் நன்கு நறுக்கப்பட வேண்டும். அந்த கொத்தமல்லி தழைகளை, சுமார் 1/2 கோப்பை அளவு தண்ணீரில் போட்டு, அதை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். ஒரு வடிகட்டி மூலம் அந்த சாறை வடிகட்டி, உடனடியாகப் பரிமாறவும். அருந்துவதற்காக அந்த சாற்றுடன் சிறிது கூடுதல் தண்ணீரும் (சுமார் 1/4 கோப்பை) கூடசேர்த்துக் கொள்ளலாம்.
*கொத்தமல்லியை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.
*கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கும்.
*கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.*இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
*இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
*பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.
*கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.
கொத்தமல்லி கஷாயம்
கொத்தமல்லி(அல்லது) தனியா, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை மற்றும் சதகுப்பை இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு 600 கிராம் கற்கண்டை பொடியுடன் கலந்து வைத்து கொள்ளவும். இவற்றை கஷாயம் செய்து சாப்பிடலாம்.
பயன்கள்: இந்த கஷாயத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.
Comments
Post a Comment