இயற்கையின் அதிசயம்



ஆவாரம் பூ

" ஆவாரம்பூவின் மகத்துவம் "
       
*தங்கத்திற்கு நிகரான ஆவாரம் பூ*: மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலமாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று. ஆவாரம்பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது.

சாதரணமான உதாரணம்:  அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது, இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தகர்க்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல் கொண்டது, இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது. ஆவாரம் பூ இதழ் மையத்தில் உள்ள வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம். 

பொன்னிற ஒளி வீசும் உடல்: ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள். அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது. அவரிடம் அந்த மாணவர்கள் உங்கள் ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார், ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது இந்த பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம்  என்றார் . “ஆவாரம்பூ காலையில் ஒரு கைப்பிடி, மாலையில் ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன்” என்றார். “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது” என்றார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ.


மருத்துவ பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

1. ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும்.

2. உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும்.

3. ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும்.

4. உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.

5. காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

6. பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

7. ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

8. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும். 

9. ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல்,சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல்,  மூத்திர ரோகம் குணமாகும். 

10. (1)கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ: 
எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது.

      (2)கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ:
ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக்  கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

     (3)கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ:
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

     (4) முடி பளபளப்பாக்கும் ஆவாரம் பூ: ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.

11. உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு: ஆவாரம் பூக்களை  வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.

12. ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

13. மூலம் குணமாக: ஆவாரம் பூ  கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

14. உடல் வலிமை பெற: அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.


15. ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஆவாரம் பூ சிறந்த தீர்வினை வழங்குகிறது:

 16. அசோகட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ , திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சமஅளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனே சரியாகிவிடும்.

17. *கண்ணில் படரும் வெண்படல நோயை ஆவாரம் விதை பொடியின் மூலம் குணப்படுத்த முடியும் இதை ஆப்பிரிக்க மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.*

18. ஆவாரம்பூ குடிநீர்: நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

19. ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

20. ஆவாரை இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.
 
21. ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை   நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும்.
 
22. வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

23. உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
 
24. மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர்  நீரில் இட்டு, 200 மி.லி. ஆக  சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
 
25. தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து  அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி,  உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
 
26. திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். 
 
27. ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

28. ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடிய பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
 
29. ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும்

30. தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
 
31. ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்

32. ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

33. *கண்ணில் படரும் வெண்படல நோயை ஆவாரம் விதை பொடியின் மூலம் குணப்படுத்த முடியும் இதை ஆப்பிரிக்க மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.*
 

 “நீரிழிவு”க்கு பயன்படும் ஆவாரம் பூ

1. நீரிழிவு நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுன்னு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து.

2. ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

3. ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

4 . ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
             
5. ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை   நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும்.


"ஆவாரம்பூ நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்று முது மொழி உண்டு.  ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலையும் மருத்துவ குணம் இருக்கு.”

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்