இயற்கை மருத்துவம்
*மணித்தக்காளி*
*மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் :*
*சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.*
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
*மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.*
*பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும். *
*மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.* நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.*
*நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.* எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்.*
*சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது*. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். *இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.*
*மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.*
*மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.*
* மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல பலனைத் தருமாம்.*
*இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.*
*மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.*
*மணத்தக்காளிக்காய் வாந்தியைப் போக்கும்.*
மணத்தக்காளிக் கீரையின் பயன்கள்.
1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.
2. வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.
3. இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.
4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
6. கண்பார்வை தெளிவு பெறும்.
7. வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணதக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.
10. கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.
11. மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
12. கருப்பையில் கரு வலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.
13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment